AUS vs ENG: 3வது டி20யில் ஜோஸ் பட்லர் அதிரடி அரைசதம்..! ஆஸி.,க்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Oct 14, 2022, 4:45 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 12 ஓவரில் 112 ரன்களை குவிக்க, டி.எல்.எஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவிற்கு 12 ஒவரில் 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் நடந்துவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி கான்பெராவில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தொடக்க வீரர் டேவிட் வார்னருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

Latest Videos

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும்..? முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் வாசிம் அக்ரம் ஆருடம்

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இங்கிலாந்து அணியில் சாம் கரன், கிறிஸ் ஜோர்டானுக்கு ஓய்வளிக்கப்பட்டு முறையே கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் உட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் உட், அடில் ரஷீத், ரீஸ் டாப்ளி.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, பட்லரும் டேவிட் மலானும் இணைந்து நன்றாக ஆடிக்கொண்டிருக்க, 7வது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. அதனால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 10வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து ஹேசில்வுட் வீசிய 11வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட அந்த ஓவரில் 22 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர், 41 பந்தில் 65 ரன்களை குவிக்க, இங்கிலாந்து அணி 12 ஓவரில் 112 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - 15 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடும் இந்திய அணி..? பிசிசிஐ திட்டம்

ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டு இங்கிலாந்து பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது ஓவர்கள் குறைக்கப்பட்டதால், டி.எல்.எஸ் முறைப்படி கணக்கிடப்பட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 

click me!