இங்கிலாந்து முன்னாள் கேப்டன் தேர்வு செய்த இந்தியா - பாகிஸ்தான் ஆல்டைம் லெவன்

By karthikeyan VFirst Published Jun 16, 2019, 2:01 PM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியைவிட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். 
 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியைவிட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான். 

கிரிக்கெட்டில் பாரம்பரிய எதிரிகளாக திகழும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்றைய போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மழை பெய்யாமல் இருப்பதுதான் முக்கியம்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில், இரு அணிகளிலிருந்தும்  சிறந்த வீரர்களை தேர்வு செய்து ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன். 

இந்தியா - பாகிஸ்தான் ஆல்டைம் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் - சேவாக்கை தேர்வு செய்துள்ள மைக்கேல் வாகன், மூன்றாம் வரிசையில் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான மற்றும் மிரட்டலான தொடக்க ஜோடியாக திகழ்ந்த சச்சின் - சேவாக் ஜோடியை தேர்வு செய்துள்ளார் மைக்கேல் வாகன்.

நான்காம் வரிசையில் இன்சமாம் உல் ஹக்கையும் ஐந்தாம் வரிசைக்கு ஜாவேத் மியான்தத்தையும் தேர்வு செய்தார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக தோனியை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக இம்ரான் கான், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸுடன் பும்ராவையும் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் ஒரேயொரு ஸ்பின்னராக அனில் கும்ப்ளேவை மைக்கேல் வாக்ன் தேர்வு செய்தார். 

மைக்கேல் வாகனின் ஆல்டைம் சிறந்த இந்தியா - பாகிஸ்தான் அணி:

சேவாக், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், ஜாவேத் மியான்தத், தோனி, இம்ரான் கான், வாசிம் அக்ரம், அனில் கும்ப்ளே, பும்ரா, வக்கார் யூனிஸ். 
 

click me!