மும்பையா? லக்னோவா? வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published May 24, 2023, 7:23 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் எலிமினேட்டருக்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 3 போட்டிகளில் மூன்றிலும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசனில் 2 போட்டிகளிலும், இந்த சீசனில் ஒரு போட்டியிலும் மோதியுள்ளன.

அப்ஸ்டாக்கிற்கு தெரியுது, உங்களுக்கு தெரியவில்லை: ரவீந்திர ஜடேஜா வேதனை டுவீட் – எங்க அணிக்கு வாங்க!

Tap to resize

Latest Videos

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஹிருத்திக் ஷோகீன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

ஆயுஷ் பதோனி, தீபக் கூடா, பெரேரக் மான்கட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), குர்ணல் பாண்டியா (கேப்டன்), கிருஷ்ணப்பா கவுதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹக், யாஷ் தாகூர், மோசின் கான்.

அடுத்த வருசம் ஹல்லா போல், கொஞ்சம் பலமா போல் - சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த அஸ்வின்!

இதில் கடந்த 16ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரு அணிகளும் கடைசி போட்டிகளில் வெற்றியுடன் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா? டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன் – தோனி!

மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த முறை பிளே ஆஃப் கூட வராத மும்பை இந்தியன்ஸ் இந்த முறை பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டரில் விளையாடுகிறது. இதே போன்று கடந்த சீசனில் பிளே ஆஃப் வந்த லக்னோ, ஆர்சிபியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது. 16 சீசன்களில் 10 ஆவது முறையாக மும்பை பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ளது.

யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் ஆடிய சென்னை 172 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் வெற்றி பெற்றதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. வரும் 28 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது.

ஜட்டுவின் பீல்டிங்கை மாற்றி ஹர்திக் பாண்டியாவை தூக்கிய தோனி: வைரலாகும் வீடியோ!

 

Huge roar for Rohit in Chepauk. pic.twitter.com/Gp4RvWAGNe

— Johns. (@CricCrazyJohns)

 

click me!