ரவிச்சந்திரன் அஸ்வின், சிஎஸ்கே அணிக்கு ஆதரவு கொடுத்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் திருவிழா கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் இடம் பெற்ற இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. இதில், 14 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் இருந்தது. கடைசி வரை பிளே ஆஃப் வாய்ப்புக்காக காத்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா? டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன் – தோனி!
கடந்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை இழந்து 2ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த அணியில் இடம் பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் ஒவ்வொரு போட்டி நடந்த பிறகு ஹல்லா போல் வீடியோவை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?
தற்போதும் கூட ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல் இப்போதைக்கு வீட்டிலிருந்தபடியே போல், கிண்டல் செய்தவர்கள், ஆதரவு தெரிவித்தவர்கள் என்று எல்லோக்கும் நன்றி. இப்போ சென்னையில் இருந்த போல்வதினால் CSK vs GT மேட்ச் பற்றி பேச வேண்டும்.
ஜட்டுவின் பீல்டிங்கை மாற்றி ஹர்திக் பாண்டியாவை தூக்கிய தோனி: வைரலாகும் வீடியோ!
இருந்தாலும் அடுத்த வருசம், ஹல்லா போல், கொஞ்சம் பலமாவும் போல், இன்னும் கொஞ்சம் சத்தமாவும் போல் என்று சொல்லலாம். GT vs RCB மேட்ச் முடிந்த பிறகு ஜிடி அணியிடமிருந்து ஒரு போன் வந்தது. இந்த சீசனில் 6ஆவது இடம் பிடிக்க வேண்டிய நீங்கள் சுப்மன் கில்லால் 5ஆவது இடம் பிடித்தீர்கள். மைதானம் முழுவதும் மஞ்சளாக இருக்கும் போது நீங்கள் ஜிடிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக சொன்னார். இறுதியாக ஹல்லா போல் நல்லா போல் வீட்டிலிருந்தபடியே…என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!
Halla Bol Konjam Yellove Bol! 💛 pic.twitter.com/Qhm4qLVvy3
— Halla Bol Konjam Yellove Bol 💛 (@crikipidea)