குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு சென்னையில் வந்து விளையாடுவீர்களா என்ற கேள்வி தோனியிடம் கேட்கப்பட்டது.
யுவராஜ் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் ரூ.320 கோடியா?
அதற்கு பதிலளித்த தோனி கூறியிருப்பதாவது: அடுத்த சீசனில் நான் விளையாடுவது குறித்து வரும் டிசம்பரில் தான் முடிவு எடுப்பேன். அதற்கு இன்னும் 8 முதல் 9 மாதங்கள் இருக்கிறது. ஆதலால், இப்போதைக்கு அதைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. டிசம்பர் மாதம் தான் மினி ஏலம் நடக்கும். அப்போது இருக்கும் எனது உடல் தகுதியை வைத்து அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவு எடுப்பேன். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் வீடுகளில் அதிக நேரம் இருப்பதில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் வீட்டை விட்டு வந்தேன். அதன் பிறகு மார்ச் மாதம் முதல் அணியோடு இணைந்து பயிற்சி செய்து வருகிறேன்.
ஜட்டுவின் பீல்டிங்கை மாற்றி ஹர்திக் பாண்டியாவை தூக்கிய தோனி: வைரலாகும் வீடியோ!
இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் நான் அடுத்த சீசனில் விளையாடலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். இப்போதைக்கு அந்த தலைவலியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சென்னை அணியை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். எப்போதும் சிஎஸ்கே அணியில் தான் இருப்பேன். அது பிளேயிங் லெவனோ அல்லது வெளியிலோ எதுவாக இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.
எனினும், பல ஆண்டுகளாக தோனி ஓய்வு குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆதலால், இந்த சீசனில் அவர் டைட்டில் வாங்கிக் கொடுத்தால் வேண்டுமென்றால் ஓய்வு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!