ஜட்டுவின் பீல்டிங்கை மாற்றி ஹர்திக் பாண்டியாவை தூக்கிய தோனி: வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published May 24, 2023, 1:07 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரவீந்திர ஜடேஜாவின் பீல்டிங் மாற்றி வைத்து தோனி எளிதில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் குவாலிஃபையர் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் ஆடினர். இதில், கெய்க்வாட் 60 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே 40 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்: சாக்‌ஷி, தோனியின் சொத்து மதிப்பு ரூ.1071 கோடி!

Tap to resize

Latest Videos

பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். விருத்திமான் சஹா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். போட்டியின் 6ஆவது ஓவரை மகீஷ் தீக்‌ஷனா வீசினார். அப்போது ரவீந்திர ஜடேஜா லெக் சைடு திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜாவை ஆஃப் சைடு திசையில் நிற்க வைக்கவே, 5ஆவது பந்தில் ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை ஜடேஜா கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார்.

பத்திரனாவுக்காக ரிஸ்க் எடுத்து 5 நிமிடம் மைதானத்தில் நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனி!

ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து வந்த மற்ற வீரர்கள் போராடிய போதிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சிஎஸ்கே 10ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. வரும் 28 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.

விஜய் சங்கரை மான்கட் முறையில் ஆட்டமிழக்க முயற்சித்த தீபக் சாஹர் – கூலாக சிரித்த எம்.எஸ்.!

 

This!

Talismanic Dhoni!

How he set up Hardik Pandya and moved Jaddu just in catching position.

pic.twitter.com/7kaB2otZfb

— Mangalam Maloo (@blitzkreigm)

 

click me!