BBL: மேத்யூ ஷார்ட் அதிரடி சதம்.. மேத்யூ வேட் காட்டடி அரைசதம்.! கடின இலக்கை அடித்து அடிலெய்ட் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 5, 2023, 5:16 PM IST
Highlights

மேத்யூ ஷார்ட்டின் அதிரடி சதம் மற்றும் மேத்யூ வேடின் காட்டடி அரைசதத்தால் 230 ரன்கள் என்ற கடின இலக்கை அடித்து அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இடையே அடிலெய்டில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ரியான் கிப்சன், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகர், ஹாரி கான்வே, ஹென்ரி தார்ண்டன்.

2023 ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? சங்கக்கரா அதிரடி

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

காலெப் ஜூவெல், பென் மெக்டெர்மோட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜாக் க்ராவ்லி, டிம் டேவிட், ஆசிஃப் அலி, மிட்செல் ஓவன், ஃபஹீம் அஷ்ரஃப், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பென் மெக்டெர்மோட் மற்றும் காலெப் ஜுவெல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 88 ரன்களை குவித்து கொடுத்தனர். ஜுவெல் 25 பந்தில் 54 ரன்களும், மெக்டெர்மோட் 30 பந்தில் 57 ரன்களும் அடித்தனர்.  அதன்பின்னர் ஜாக் க்ராவ்லியும் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய க்ராவ்லி 28 பந்தில் 54 ரன்களை விளாச, டிம் டேவிட் 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்களை அடிக்க, 20 ஓவரில் 229 ரன்களை குவித்த 

230 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் கிப்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ ஷார்ட் அதிரடியாக பேட்டிங் ஆட, அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மேத்யூ வேட், காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். 29 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்தார் மேத்யூ வேட்.

சஞ்சு சாம்சனுக்கு பதில் களமிறங்குவது யார்..? நீண்ட நாள் காத்திருக்கும் வீரருக்கு சான்ஸ்..! உத்தேச ஆடும் லெவன்

ஆடம் ஹோஸ் அதிரடியாக ஆடி 22 பந்தில் 38 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்த மேத்யூ ஷார்ட், 100 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அவரது அதிரடி சதத்தால் 230  ரன்கள் என்ற கடின இலக்கை கடைசி ஓவரின் 3வது பந்திலேயே அடித்து அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!