BBL: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வீரர்கள்..! 20 ஓவரில் 229 ரன்கள்

Published : Jan 05, 2023, 03:42 PM IST
BBL: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் வீரர்கள்..! 20 ஓவரில் 229 ரன்கள்

சுருக்கம்

பிக்பேஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவரில் 229 ரன்களை குவித்தது.  

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

மேத்யூ ஷார்ட் (கேப்டன்), ரியான் கிப்சன், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகர், ஹாரி கான்வே, ஹென்ரி தார்ண்டன்.

AUS vs SA: இரட்டை சதத்தை நெருங்கிய உஸ்மான் கவாஜா.. ஸ்மித் சதம்..! ஆஸ்திரேலியா மெகா ஸ்கோர்

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

காலெப் ஜூவெல், பென் மெக்டெர்மோட், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜாக் க்ராவ்லி, டிம் டேவிட், ஆசிஃப் அலி, மிட்செல் ஓவன், ஃபஹீம் அஷ்ரஃப், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பென் மெக்டெர்மோட் மற்றும் காலெப் ஜுவெல் ஆகிய இருவரும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 88 ரன்களை குவித்து கொடுத்தனர். ஜுவெல் 25 பந்தில் 54 ரன்களும், மெக்டெர்மோட் 30 பந்தில் 57 ரன்களும் அடித்தனர்.

சஞ்சு சாம்சனுக்கு பதில் களமிறங்குவது யார்..? நீண்ட நாள் காத்திருக்கும் வீரருக்கு சான்ஸ்..! உத்தேச ஆடும் லெவன்

அதன்பின்னர் ஜாக் க்ராவ்லியும் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக பேட்டிங் ஆடிய க்ராவ்லி 28 பந்தில் 54 ரன்களை விளாச, டிம் டேவிட் 20 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 39 ரன்களை அடிக்க, 20 ஓவரில் 229 ரன்களை குவித்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 230 ரன்கள் என்ற கடின இலக்கை அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!