சேப்பாக்கத்தில் நடந்த போட்டியின் போது குஜராத் அணிக்கு எதிரான பவுலிங் செய்ய வந்த மதீஷா பதிரனா தோனி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 7ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது. இந்தப் போட்டியிலில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 51 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது கடைசி வரை போராடி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
SRH vs MI போட்டியை ரஜினி பார்த்திருந்தால் மகிழ்ச்சி என்றிருப்பார் – டிரெண்டாகும் ரஜினி வீடியோ!
இந்தப் போட்டியின் போது விஜய் சங்கருக்கு தோனி பிடித்த கேட்ச் டிரெண்டானது. தோனியின் வேகத்தை சிறுத்தையுடன் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கி டிரெண்டாக்கினர். இந்தப் போட்டியில் தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்தாப்ஜூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டேரில் மிட்செல் மற்றும் மதீஷா பதிரனா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இந்த நிலையில் காயம் காரணமாக முதல் போட்டியில் இடம் பெறாத இலங்கை வீரர் மதீஷா பதிரனா போட்டி முடிந்த அடுத்த நாள் தான் சிஎஸ்கே அணியுடன் இணைந்தார். இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதோடு, பவுலிங் செய்யவும் அனுமதிக்கப்பட்டார். இதற்கு எல்லாம் காரணமே தோனி தான். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பதிரனா 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
மரண அடியை திருப்பி கொடுத்த திலக் வர்மா – கடைசில 31 ரன்னில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ்!
பதிரனா பந்து வீசுவதற்கு முன்னதாக தோனி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. உண்மையில், அவர் தோனியிடம் ஆசிர்வாதம் பெற்றாரா? இல்லை, பவுலிங் போடுவதற்கு முன் பந்து வீச்சாளர்கள் செட் செய்யும் மார்க்கை பிக்ஸ் செய்தாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த வீடியோவை வைத்து உண்மையான சிஷ்யன் நீங்கள் தான் என்று பதிரனாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Pathirana Taking Blessings from MS Dhoni Before Bowling is So Wholesome!! 🥹💛 pic.twitter.com/xPVFkOrsf4
— DIPTI MSDIAN (@Diptiranjan_7)