NZ vs IRE: கப்டில் சதம்; நிகோல்ஸ் காட்டடி அரைசதம்! 3வது ODIயில் அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்தது நியூசி

Published : Jul 15, 2022, 07:31 PM IST
NZ vs IRE: கப்டில் சதம்; நிகோல்ஸ் காட்டடி அரைசதம்! 3வது ODIயில் அயர்லாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்தது நியூசி

சுருக்கம்

அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 360 ரன்களை குவித்து, 361 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஃபின் ஆலன் 33 ரன்கள் அடித்தார். வில் யங் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் டாம்லேதம் 30 ரன்கள் அடித்தார்.

இதையும் படிங்க - கோலி ஃபார்ம் பற்றி கேட்ட நிருபர்.. கடுப்பான ரோஹித்..! வைரல் வீடியோ

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அபாரமாக பேட்டிங் ஆடிய மார்டின் கப்டில், 115 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய நிகோல்ஸ் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலிங்.. ரீஸ் டாப்ளி வரலாற்று சாதனை

54 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார் நிகோல்ஸ். க்ளென் ஃபிலிப்ஸ் 30 பந்தில் 47 ரன்கள் அடித்தார். இதையடுத்து 50 ஓவரில் 360 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 361 ரன்கள் என்ற கடின இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!