AUS vs WI டெஸ்ட்: இரட்டை சதத்தை நோக்கி லபுஷேன்.. முதல் நாளில் ஆஸி., அபார பேட்டிங்.. பெரிய ஸ்கோரை நோக்கி ஆஸி.,

By karthikeyan VFirst Published Nov 30, 2022, 9:10 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்களை குவித்துள்ளது.
 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

அம்பாதி ராயுடு மாதிரி சஞ்சு சாம்சனை ஒழிக்க பார்க்குறாங்க! பிசிசிஐ-யின் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தும் கனேரியா
 
வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), டேக்நரைன் சந்தர்பால், பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 142 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா, 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவரும் மார்னஸ் லபுஷேன் சதமடித்தார். அவருடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பாக பேட்டிங்  ஆடி அரைசதம் அடித்தார். இருவரும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்களை குவித்துள்ளது. லபுஷேன் 154 ரன்களுடனும், ஸ்மித் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Vijay Hazare: கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய அசாம் அணி போராடி தோல்வி! ஃபைனலில் மகாராஷ்டிரா - சௌராஷ்டிரா மோதல்

2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 293 ரன்களை குவித்துள்ள நிலையில், லபுஷேன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டதால், ஆஸ்திரேலிய அணி பெரிய ஸ்கோரை அடிப்பது உறுதி. 154 ரன்களுடன் களத்தில் இருக்கும் லபுஷேன், இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.
 

click me!