Vijay Hazare: கடின இலக்கை வெறித்தனமா விரட்டிய அசாம் அணி போராடி தோல்வி! ஃபைனலில் மகாராஷ்டிரா - சௌராஷ்டிரா மோதல்

By karthikeyan V  |  First Published Nov 30, 2022, 6:11 PM IST

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் மகாராஷ்டிராவுக்கு எதிராக 351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணி 338 ரன்கள் அடித்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அரையிறுதியில் அசாமை வீழ்த்தி வெற்றி பெற்ற மகாராஷ்டிரா அணி ஃபைனலில் சௌராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது.
 


விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா, அசாம் அணிகள் முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் கர்நாடகாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா - அசாம் அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் அசாம் அணி ஃபீல்டிங்கை  தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

முதலில் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆடி சதமடித்தார். காலிறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 126 பந்தில் 18 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 168 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து அங்கிட் பாவ்னேவும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அங்கித் 110 ரன்களை குவித்தார். ருதுராஜ் மற்றும் அங்கித் ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் 50 ஓவரில் 350 ரன்களை குவித்த மகாராஷ்டிரா அணி, 

இந்திய அணி தலைமை தேர்வாளருக்கு விண்ணப்பித்த முன்னாள் வீரர்கள் பட்டியல்..! ரேஸில் இருக்கும் தமிழக வீரர்

351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸாரிகா (5) மற்றும் சாய்க்கியா (10) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ரிஷவ் தாஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரியான் பராக் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

103 ரன்களுக்கே அசாம் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதிலும், 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிப்சங்கர் ராய் மற்றும் ஸ்வருபம் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து, 5வது விக்கெட்டுக்கு 133 ரன்களை குவித்தனர். ஷிப்சங்கர் ராய் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் ஆடிசதத்தை நெருங்கிய ஸ்வருபம் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு 45வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி வீரர் வரை இலக்கை எட்ட அசாம் அணி கடுமையாக போராடியபோதிலும், அந்த அணியால் 50 ஓவரில் 338 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. அசாம் அணி கடுமையாக போராடியபோதிலும், 12 ரன்கள் என்ற சிறிய வித்தியாசத்தில் கடைசியில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரா அணி ஃபைனலில் சௌராஷ்டிராவை எதிர்கொள்கிறது.

இந்திய டி20 அணியில் சீனியர் வீரர்களுக்கு இனி இடம் இல்லை..! பிசிசிஐ அதிரடி

டிசம்பர் 2ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் ஃபைனலில் மகாராஷ்டிராவும் சௌராஷ்டிராவும் மோதுகின்றன.
 

click me!