விஜய் ஹசாரே டிராபி: அரையிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது சௌராஷ்டிரா! ஆட்டநாயகன் உனாத்கத்

By karthikeyan VFirst Published Nov 30, 2022, 4:41 PM IST
Highlights

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் கர்நாடகா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சௌராஷ்டிரா  அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா, அசாம் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. கர்நாடகாவும் சௌராஷ்டிராவும் ஒரு அரையிறுதி போட்டியில் மோதின. 

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஏ மைதானத்தில் நடந்த போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

NZ vs IND: வெறித்தனமா இலக்கை விரட்டிய நியூசிலாந்து.. மழையால் ஆட்டம் ரத்து.! ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடகா அணியின் தொடக்க வீரர் சமர்த் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். ஒருமுனையில் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த சமர்த் 88 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். 

மயன்க் அகர்வால் (1), மனீஷ் பாண்டே(0) ஆகிய சீனியர் வீரர்கள் படுமோசமாக சொதப்பினர். ஷரத் (3), நிகின் ஜோஸ்(12), ஷ்ரேயாஸ் கோபால் (9) என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கர்நாடகா அணி. சௌராஷ்டிரா அணியில் சிறப்பாக பந்துவீசிய சீனியர் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

விஜய் ஹசாரே டிராபி: ருதுராஜ் கெய்க்வாட் அபார சதம்.. அரையிறுதியில் அசாமுக்கு கடின இலக்கை நிர்ணயித்த மகாராஷ்டிரா

172 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர்கள் ஹர்விக் தேசாய் மற்றும் ஷெல்டான் ஜாக்சன் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். 3ம் வரிசை வீரர் ஜெய் கோஹில் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ப்ரெரக் மன்கத் (35), சமர்த் வியாஸ்(33) ஆகியோரும் பங்களிப்பு செய்ய, 37வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சௌராஷ்டிரா அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

click me!