கணபதி பாப்பா மோரியா – மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்த ரோகித், ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்!

Published : Jul 05, 2024, 05:57 PM ISTUpdated : Jul 05, 2024, 08:02 PM IST
கணபதி பாப்பா மோரியா – மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்த ரோகித், ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ்!

சுருக்கம்

டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. பார்படாஸில் நடைபெற்ற இந்த போட்டியைத் தொடர்ந்து பெரில் சூறாவளி தாக்கம் ஏற்பட்ட நிலையில் இந்திய அணி வீரர்கள் 4 நாட்களுக்கு பிறகு டெல்லி வந்தனர். இதையடுத்து, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்று அவருடன் கலந்துரையாடினர். மேலும், அவருடன் இணைந்து டிராபியோடு போட்டோஷூட் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தப்பட்டது.

TNPL Season 8: பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8 – எந்த சேனலில் ஒளிபரப்பு? முதல் போட்டி யாருக்கு?

அதன் பிறகு அங்கிருந்து மெரைன் டிரைவ் சென்ற இந்திய அணி வீரர்கள் நரிமன் பாய்ண்டிலிருந்து வான்கடே ஸ்டேடியம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர். அப்போது வழிநெடுகிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று சேர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து வான்கடே ஸ்டேடியம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் அடுத்தடுத்து பேசினர். மேலும், பிசிசிஐ சார்பாக ரூ.125 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அதன் பிறகு வீரர்கள் ஒன்றாக இணைந்து வந்தே மாதம் பாடல் பாடினர்.

Victory Parade: 16 மணி நேர டிராவலுக்கு பிறகு அவசர அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்ற கோலி!

கடைசியாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷிவம் துபே என்று ஒவ்வொருவரும் டான்ஸ் ஆடினர். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் கலந்து கொள்ளவும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மண்ணோட டேஸ்ட் எப்படி இருந்தது? ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி!

அதன்படி இன்று மகாராஷிடிரா மாநில முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் விநாகர் சிலையும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு சட்டசபைக்கு சென்ற ரோகித் சர்மா முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். மேலும், டி20 உலகக் கோப்பை டிராபி வென்றது குறித்தும் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடைசியாக ரோகித் சர்மாவிற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வழங்கி கௌரவித்தார்.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?