சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 199 ரன்கள் குவித்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 19ஆவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர் சுஜய் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் இந்தப் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராம் அரவிந்த் கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.
சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்: எல்லாமே நரேந்திர மோடி மைதானமா?
சேலம் ஸ்பார்டன்ஸ்:
அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் சும்ரா, கௌசிக் காந்தி, மான் ஃபாப்னா, எஸ் அபிஷேக்ம், முகமது அத்னான், சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ராஜேந்திரன் கார்த்திகேயன், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி
லைகா கோவை கிங்ஸ்:
எஸ் சூர்யா, எஸ் சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), எம் முகமது, ஆதீக் யுஆர் ரஹ்மான், சித்தார்த், வள்ளியப்பன் யுதிஸ்வரன், ஜதவேத் சுப்பிரமணியன்
பந்து வீச்சு தரப்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளும், சச்சின் ரதி, கௌசிக் காந்தி மற்றும் அபிஷேக் தன்வார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடி வருகிறது. தற்போது வரையில் 3 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது.