ஒரு புறம் முழங்கால் காயத்தால் ஓய்வில் இருந்த நான், பொருளாதார நெருக்கடியால் அதிகளவில் பாதிக்கப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக முழங்காலில் காயம் ஏற்பட்ட சுரேஷ் ரெய்னா பல மாதங்களாக படுக்கையிலேயே இருந்தார். இதன் காரணமாக அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதில், இந்தியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்: எல்லாமே நரேந்திர மோடி மைதானமா?
முழங்கால் வலி ஒரு புறம் இருந்தாலும், நிதி நிலை நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணிக்காக விளையாடாமல் போய்விடுவோமோ என்ற பயம் ஒரு புறம் இருந்தது என்று ஜியோ சினிமா நேர்காணலின் போது சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முழங்காலில் காயம் ஏற்பட்ட போது உடல் நிலையை விட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என்னை மிகவும் பாதிப்படையச் செய்தது.
நான் வாங்கிய கடனைப் பற்றி கவலைப்படாமல் உடல்நிலையில் மட்டுமே கவனம் செலுத்துமாறு எனது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். அப்போது தான் டி20 உலகக் கோப்பை தொடர் வேறு ஆரம்பமாக இருந்தது. எனினும், என்னால் அப்போதைய சூழ்நிலையில் உடல் தகுதி பெற முடியாத நிலையில் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை.
அதன் பிறகு என்ன நடந்தாலும் அதற்கு கடவுள் தான் பொறுப்பு என்று எனது முடிவை அவரிடமே விட்டுவிட்டேன். இதையடுத்து எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடிவு செய்தேன். இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய காலகடட்ங்களில் எல்லாம் வருடத்திற்கு 10 முதல் 20 நாட்கள் மட்டுமே அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 15 என்ன ஸ்பெஷல்? இந்தியா – பாகிஸ்தான் போட்டி அப்போது நடத்தப்பட காரணம்?
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் சுரேஷ் ரெய்னாவும் ஒரு பகுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா, 18 டெஸ்ட், 226 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது? முதல் போட்டி யாருடன்?