நம்பர் ஒன் இடத்தில் லைகா கோவை கிங்ஸ்: டாஸ் வென்ற சேலம் பவுலிங் தேர்வு!

By Rsiva kumar  |  First Published Jun 27, 2023, 7:23 PM IST

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று நடக்கும் 19ஆவது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதற்கு முன்னதாக விளையாடிய 5 போட்டிகளில் லைகா கோவை கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

முழங்கால் காயம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் லோன் – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டேன் – சுரேஷ் ரெய்னா!

Tap to resize

Latest Videos

இதே போன்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

சேலம் ஸ்பார்டன்ஸ்:

அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் சும்ரா, கௌசிக் காந்தி, மான் ஃபாப்னா, எஸ் அபிஷேக்ம், முகமது அத்னான், சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ராஜேந்திரன் கார்த்திகேயன், சச்சின் ரதி, எம் கணேஷ் மூர்த்தி

சென்னையில் நடக்க இருந்த போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்: எல்லாமே நரேந்திர மோடி மைதானமா?

லைகா கோவை கிங்ஸ்:

எஸ் சூர்யா, எஸ் சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ராம் அரவிந்த், யு முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), எம் முகமது, ஆதீக் யுஆர் ரஹ்மான், சித்தார்த், வள்ளியப்பன் யுதிஸ்வரன், ஜதவேத் சுப்பிரமணியன்

IND vs PAK World Cup 2023: இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் – வீரேந்தர் சேவாக் கணிப்பு!

click me!