லைகா கோவை கிங்ஸிற்கு ஆப்பு வச்ச மழை – 129 ரன்களில் சுருட்டிய திண்டுக்கல் டிராகன்ஸ்!

By Rsiva kumar  |  First Published Aug 4, 2024, 10:17 PM IST

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசனுக்கான இறுதிப் போட்டி தற்போது சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னையில் பெய்த மழையின் காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் தேர்வு செய்தார்.

Paris 2024, Novak Djokovic: ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்த ஜோகோவிச்!

Tap to resize

Latest Videos

அதன்படி முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் சுஜய் 22 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் 11 ரன்னில் வெளியேறினார். சாய் சுதர்சன் 14, முகிலேஷ் 0 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன் பிறகு ராம் அரவிந்த் மற்றும் ஆதிக் உர் ரஹ்மாம் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். எனினும், ஆதிக் 25 ரன்களில் வெளியேறவே, அரவிந்த் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த கேப்டன் ஷாருக் கான் 3 ரன்னில் வெளியேற, முகமது 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக லைகா கோவை கிங்ஸ் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணிக்கு ஆப்பு வச்ச சுழல் சக்கரவர்த்தி வாண்டர்சே – ஒரே வீரர் 6 விக்கெட் எடுத்து சாதனை!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவரத்தி மற்றும் பி விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சுபோத் பதி ஒரு விக்கெட் எடுத்தார். இதைத் தொடர்ந்து 130 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் திண்டுக்கல் வெற்றி பெற்றால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று டிராபியை கைப்பற்றும்.

கடைசியில் லவ்லினாவும் தோல்வி – குத்துண்டையில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி, ஒரு பதக்கம் கூட இல்ல!

click me!