முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!

Published : Jun 28, 2023, 12:44 AM IST
முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற லைகா கோவை கிங்ஸ்; சேலம் சேப்டர் குளோஸ்!

சுருக்கம்

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக லைகா கோவை கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 19ஆவது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.

டிராவில் முடிந்த இந்தியா – குவைத் போட்டி: இந்தியாவுக்கு அரையிறுதி கன்ஃபார்ம்!

தொடக்க வீரர் சுஜய் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் இந்தப் போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராம் அரவிந்த் கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினார். அவர் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது – வாசீம் அக்ரம்!

பந்து வீச்சு தரப்பில் சன்னி சந்து 3 விக்கெட்டுகளும், சச்சின் ரதி, கௌசிக் காந்தி மற்றும் அபிஷேக் தன்வார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 200 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சேலம் ஸ்பார்டன்ஸ் அணி விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ராம் அரவிந்த் அதிரடியால் லைகா கோவை கிங்ஸ் 199 ரன்கள் குவிப்பு!

அதிகபட்சமாக சன்னி சந்து 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே 19 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக லைகா கோவை கிங்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனினும் சேலம் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்தது.

முழங்கால் காயம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் லோன் – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டேன் – சுரேஷ் ரெய்னா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs NZ: சிஎஸ்கே முன்னாள் வீரர் ருத்ரதாண்டவம்.. 2வது ஓடிஐயில் இந்தியாவை பந்தாடிய நியூசிலாந்து!
IND vs NZ: அதிரடி வீரர் கணித்தபடியே 2வது ஓடிஐயில் சொதப்பிய ரோகித், விராட் கோலி.. யார் சாமி இவரு!