LSG vs RCB: முக்கியமான எலிமினேட்டர் போட்டி மழையால் தாமதம்.. டாஸ் எப்போது..? இதோ அப்டேட்

Published : May 25, 2022, 07:46 PM IST
LSG vs RCB: முக்கியமான எலிமினேட்டர் போட்டி மழையால் தாமதம்.. டாஸ் எப்போது..? இதோ அப்டேட்

சுருக்கம்

லக்னோ - ஆர்சிபி இடையேயான எலிமினேட்டர் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிளே ஆஃப் போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 2வது தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும். அந்த போட்டியில் ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

எனவே இந்த எலிமினேட்டரில் வெற்றி பெறும் முனைப்பில் தான் களமிறங்கும். கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். 7  மணிக்கு டாஸ் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக போட்டி தொடங்குவது தாமதமாகியுள்ளது. 

இரவு 7.55 மணிக்கு டாஸ் போடப்பட்டு 8.10 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!