LSG vs RCB: வாழ்வா சாவா எலிமினேட்டர் போட்டி.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published May 25, 2022, 5:13 PM IST
Highlights

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிளே ஆஃப் போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. 

எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 2வது தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளும். அந்த போட்டியில் ஜெயித்தால் ஃபைனலுக்கு முன்னேறலாம்.

எனவே இந்த எலிமினேட்டர் போட்டி லக்னோ மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி ஆகும். கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், மோசின் கான், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி, டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரார், ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
 

click me!