ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக சதம் உள்பட 610 ரன்கள் எடுத்துள்ளார் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு அணியின் ஹோம் மைதமானமான சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. லக்னோ அணியின் கேப்டனான கேஎல் ராகுல் மற்ற அணிகளை விட பெங்களூரு அணிக்கு எதிராக மட்டும் 12 போட்டிகளில் விளையாடி 610 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஏலத்திற்கு முன் ஆர்சிபி அணியிலிருந்து கேஎல் ராகுல் வெளியேறினார். அதன் பிறகு பஞ்சாப் அணிக்காக 3 சீசன்களில் விளையாடினார். கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது லக்னோ அணியின் கேப்டனான கே எல் ராகுல், பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து வருகிறார்.
இதுவரையில் பெங்களூரு அணிக்கு எதிரான 12 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 610 ரன்கள் எடுத்த்தோடு அதிகபட்சமாக 132 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவரையில் 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், 8, 20, 35 ரன்கள் என்றுமோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், இண்றைய போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதற்கு முன்னதாக பெங்களூரு அணி அதன் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் மும்பை அணியை எதிர்கொண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL 2023: தோனியின் காலில் விழுந்து வணங்கிய மைதான ஊழியர்: வைரலாகும் புகைப்படம்!