குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி கேகேஆருக்கு ஐபிஎல்லில் மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்றுக்கொடுத்து ஓவர்நைட்டில் ஹீரோவான ரிங்கு சிங், யாரென்று பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கேகேஆர், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் அபாரமாக ஆடிவருகின்றனர். அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரிய மேட்ச் வின்னராக வளர்ந்துள்ளவர் ரிங்கு சிங். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில், 205 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி சாதனை வெற்றியை கேகேஆருக்கு பெற்று கொடுத்தார் ரிங்கு சிங்.
ஐபிஎல்லில் கடைசி ஓவரில் விரட்டப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான். யாருமே எதிர்பார்த்திராத விதமாக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை தொடர்ச்சியாக விளாசி கேகேஆரை வெற்றி பெற செய்தார். இந்த சாதனை மன்னன் ரிங்கு சிங் யாரென்று பார்ப்போம்.
2019 vs 2023 ஒருநாள் உலக கோப்பை..! அனைத்து அணிகளின் கேப்டன்களும் மாற்றம்.. கோப்பை யாருக்கு..?
உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த ரிங்கு சிங், கேஸ் சிலிண்டர் வியாபாரிக்கு பிறந்த 5 குழந்தைகலில் ஒருவர். பள்ளி படிப்பின்போதே, தந்தையின் வேலைக்கு உதவி வளர்ந்தவர் ரிங்கு சிங். அவர் கிரிக்கெட் ஆட செல்வதை தந்தை கண்டித்துள்ளார். ஆனால் சகோதரர்களின் ஆதரவுடன் தொடர்ந்து கிரிக்கெட் ஆடிய ரிங்கு சிங், உத்தர பிரதேச அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் ஆடியுள்ளார்.
40 முதல் தர போட்டிகளில், 50 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ஆடியுள்ளார் ரிங்கு சிங். ஐபிஎல்லில் 2017ம் ஆண்டு அவருக்கு 19 வயதாக இருந்தபோது பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டார். 2018ம் ஆண்டு அவரை ரூ.80 லட்சத்துக்கு வாங்கியது கேகேஆர் அணி. அவருக்கு ஆடும் லெவனில் இடமளிக்காமல், அவர் ஒரு நல்லஃபீல்டர் என்பதால் ஃபீல்டிங்கில் மட்டுமே பயன்படுத்திவந்த கேகேஆர் அணி, அணிக்கு சிறந்த பங்களிப்பை தொடர்ச்சியாக செய்ததன் விளைவாக கடந்த சீசனில் ஆடுவதற்கு வாய்ப்பளித்தது. இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் ஆடிவருகிறார்.
IPL 2023: ஐபிஎல்லில் தவான் தனித்துவ சாதனை
கேகேஆர் அணியில் பென்ச்சில் மட்டுமே உட்கார்ந்துவந்த ரிங்கு சிங், தனது திறமையை நிரூபிக்க, தனக்கான வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்த சீசனில் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி யாருமே செய்யாத சாதனையை செய்து மேட்ச் வின்னராக உருவெடுத்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.