IPL 2023: ரன்களை வாரி வழங்கிய வள்ளல்: இன்றைய போட்டியை மறந்திடுங்க; யாஷ் தயாளுக்கு இர்பான் பதான் அறிவுரை!

By Rsiva kumar  |  First Published Apr 10, 2023, 1:42 PM IST

நேற்றைய போட்டியில் தோல்விக்கு காரணமாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் யாஷ் தயாளுக்கு, முன்னாள் வீரர் இர்பான் பதான் நல்ல விதமாக அறிவுரை வழங்கியுள்ளார்.


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் ஹர்டிக் பாண்டியா காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார். ரஷீத் கான் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் விஜய் சங்கர் 24 பந்துகளில் 5 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 63 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

 

Yash Dayal couldn't believe what had just happened.

Rinku Singh the artist! pic.twitter.com/iVSaW6PFLv

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

Tap to resize

Latest Videos

 

Hey Yash Dayal buddy forget about today’s game like you forget about the Good days on the field to move on to the next one. If you stay strong, you will be able turn things around.

— Irfan Pathan (@IrfanPathan)

 

IPL 2023: 5 சிக்ஸர்கள் அடித்த ரிங்கு சிங் ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளி வேலை பார்த்தவர்!

பின்னர், 205 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் 83 ரன்னும், கேப்டன் நிதிஷ் ராணா 45 ரன்னும் எடுத்தனர். அதன் பிறகு வந்த ஆண்ட்ரூ ரஸல், சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர்  ஆகியோரை ரஷித் கான் ஹாட்ரிக் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதுவே போட்டிக்கு திரும்பு முனையாக அமைந்தது. குஜராத் வீரர்கள் அனைவருமே வெற்றி நமது பக்கம் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் சூப்பர் மேனாக களத்தில் நின்ற ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 48 (நாட் அவுட்) ரன்கள் குவித்தார். 

IPL 2023: தோனி, ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த ரிங்கு சிங்!

 

ஆனால், கடைச் ஓவரை வீசிய யாஷ் தயாள் அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதற்கு முன்னதாக அவர் 3 ஓவர் வீசி 38 ரன்கள் கொடுத்திருந்தார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் யாஷ் தயாள் 2ஆவது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பசில் தம்பி இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் 25ஆவது பெண் கிராண்ட் மாஸ்டரான 16 வயதான சவிதா ஸ்ரீ!

விக்கெட் இழப்பின்றி அதிக ரன்கள் கொடுத்த பவுலர்கள்:

  1. பசில் தம்பி - 70 ரன்கள் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - ஆர்சிபி
  2. யாஷ் தயாள் - 69 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்) - கேகேஆர்
  3. இஷாந்த் சர்மா - 66 ரன்கள் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - சென்னை சூப்பர் கிங்ஸ்
  4. முஜூப் உர் ரஹ்மான் - 66 ரன்கள் (கிங்ஸ் 11 பஞ்சாப்) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  5. உமேஷ் யாதவ் - 65 ரன்கள் டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி

IPL 2023: காரை பின் தொடர்ந்து சென்ற மாற்றுத்திறனாளி: வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டிய ப்ரீத்தி ஜிந்தா!

இப்படி ரன்களை வாரி வழங்கியதோடு குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஹாட்ரிக் வெற்றி கனவை தொலைத்த யாஷ் தயாளிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் நல்லவிதமாக அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஏய் யாஷ் தயாள் நண்பா, அடுத்த ஆட்டத்திற்கு செல்ல களத்தில் இருந்த நல்ல நாட்களை மறந்தது போல் இன்றைய ஆட்டத்தை மறந்து விடுங்கள். நீங்கள் வலுவாக இருந்தால், எல்லா விஷயங்களையும் மாற்ற முடியும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

IPL 2023: விராட் கோலியின் 2000 ரன்கள் சாதனையை முறியடித்த சுப்மன் கில்!

 

The monumental finish of Rinku Singh.

5 consecutive sixes to win it for KKR. pic.twitter.com/RBzUurLKu2

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!