லக்னோ மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹாக் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் சீனியரான கௌதம் காம்பீரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
கடந்த 1ஆம் தேதி லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கௌதம் அதிகபட்சமாக 23 ரன்கள் சேர்த்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே, கடைசி வரை போராடிய லக்னோ 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது விராட் கோலி ஷு காலை தூக்கி காட்டி தன்னை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டார் என்று லக்னோ வீரர் நவீன் உல் ஹாக் நடுவரிடம் குற்றம் சாட்ட்னார். இதனால், நடுவர், விராட் கோலியை அழைத்து அறிவுறுத்தினார். இதன் காரணமாக விராட் கோலி ஆத்திரமடைந்தார். அதுமட்டுமின்றி விராட் கோலி ஒவ்வொரு கேட்சாக பிடிக்கும் போது கூட மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.
அப்போது, கவுதம் காம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி சைகை மூலமாக செய்து காட்டினார். அதோடு, போட்டி முடிந்த பிறகும் கூட விராட் கோலி, லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த காம்பீர், மேயர்ஸை பிரச்சனை ஏதும் வேண்டாம் என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
விராட் கோலிக்கு முழு சம்பளம் ரூ.1.07 கோடி, கவுதம் காம்பீருக்கு முழு சம்பளம் ரூ.25 லட்சம் அபராதம்!
இதையடுத்து, விராட் கோலியின் கவனம் முழுவதும் காம்பீர் பக்கமாக திரும்பியது. ஏற்கனவே தன்னை விமர்சனம் செய்ததால் கோபத்தில் இருந்த காம்பீர், கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்ற வீரர்கள் அனைவரும் சூழந்து மோதலை தடுக்க முற்பட்டனர். ஆனால், அதில் எந்த பலனும் இல்லாத நிலையில், அமித் மிஷ்ரா மற்றும் விஜய் தாஹியா ஆகியோர் விராட் கோலியை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? ஹோம் மைதானத்தில் கிங் யாரு?
இதன் காரணமாக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. விராட் கோலியின் முழு சம்பளமும் ரூ.1.07 கோடியும், கவுதம் காம்பீரின் முழு சம்பளம் ரூ.25 லட்சம் மற்றும் நவீன் உல் ஹாக்கிற்கு போட்டியின் பாதி சம்பளம் ரூ.1.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், லக்னோ அணியின் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் அணியின் வீரர் நவீன் உல் ஹாக் இருவரும் விராட் கோலியை மறைமுகமாக சாடி வருகின்றனர். தொடர்ந்து தங்களது இன்ஸ்டா பதிவின் மூலமாக வம்புக்கு இழுத்து வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் மழை: MI எளிய வெற்றி; புள்ளிப்பட்டியலில் டாப்பில் வந்த மும்பை இந்தியன்ஸ்!
Naveen ul haq again bodied virat Kohli 😂😂😂😂😂 pic.twitter.com/ioCcwaxN4s
— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh)
Naveen ul haq is supporting Mumbai Indians tonight and posted this story after the fall of RCB's first wicket.
Man this is getting wild. 😂😭 pic.twitter.com/rYBgK7Rw3v
ஆம், நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், விராட் கோலியை, மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹரண்டார்ஃப் ஒரு ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் நவீன் உல் ஹாக் ஸ்வீட் மேங்கோஸ் என்று பதிவிட்டு மும்பை அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதே போன்று ஜேசன் பெஹரண்டார்ஃப் பந்து வீசுவது போன்று வீடியோவை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து என்ன ஒரு வீரர் என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதன் மூலமாக இருவரும் விராட் கோலியின் மீதான தங்களது கோபத்தை வெளிப்படுத்தி அவரை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுத்து வருகின்றனர் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Now that's time gautam gambhir😳 pic.twitter.com/tK8mb7ZWOm
— Abhay Pal (@eluabhay23)