ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் 199 ரன்களை குவித்து 200 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமாக நடந்துவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி இடையேயான முக்கியமான போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
IPL 2023: ஐபிஎல்லில் அபாரமான சாதனை.. வார்னர், கோலி பட்டியலில் இணைந்தார் ஷிகர் தவான்
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி ஒரு ரன்னுக்கும், 3ம் வரிசையில் இறங்கிய ரனுஜ் ராவத் 6 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபாஃப் டுப்ளெசிஸும் க்ளென் மேக்ஸ்வெல்லும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 33 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, டுப்ளெசிஸ் 41 பந்தில் 65 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 30 ரன்கள் அடித்தார். கேதர் ஜாதவ் மற்றும் ஹசரங்கா ஆகிய இருவரும் தலா 12 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. 200 ரன்கள் என்ற இலக்கை மும்பை அணிவிரட்டிவருகிறது.