ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. இந்த 2 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும்.
எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் எந்த அணி தொடர் வெற்றி பெறுகிறதோ அந்த அணி தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும்.
போட்டி மிகக்கடுமையாக இருப்பதால், இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே மிக முக்கியம். அந்தவகையில் வாழ்வா சாவா என்ற முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: ஐபிஎல்லில் அபாரமான சாதனை.. வார்னர், கோலி பட்டியலில் இணைந்தார் ஷிகர் தவான்
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆர்ச்சர் விலகியதால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் ஆடுகிறார். ஆர்சிபி அணியில் கரன் சர்மாவுக்கு பதிலாக விஜய்குமார் வைஷாக் ஆடுகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.