106 மீட்டர்.. ஆஸ்திரேலிய வீரர் அடித்த அபாரமான சிக்ஸர்.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Jan 25, 2020, 11:04 AM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி வீரர் லிவிங்ஸ்டோன், 106 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை விளாசி மிரட்டியுள்ளார். 
 

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் அரைசதம் அடித்தார். அவர் அதிரடியாக ஆடி 59 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். 

வெதரால்டு, அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரும் பங்களிப்பு செய்ய அந்த அணி 20 ஓவரில் 181 ரன்களை குவித்தது. 182 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் லிவிங்ஸ்டோன் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாமல், மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். லிவிங்ஸ்டோன் 54 பந்தில் 1 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்தார். 

இந்த 7 சிக்ஸர்களில் ஒன்று, 106 மீட்டருக்கு பறந்து, பார்வையாளர்களிடம் விழுந்தது. அபாரமான அந்த சிக்ஸரை, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே அடித்தார் லிவிங்ஸ்டோன். மைக்கேல் நெசெர் வீசிய அந்த பந்தை இறங்கிவந்து செமயாக அடித்தார் லிவிங்ஸ்டோன். அந்த வீடியோ இதோ... 

106m!

HUUUUUUUUGE pic.twitter.com/zmi10D8N65

— KFC Big Bash League (@BBL)

ஆனால் பெர்த் அணியின் மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் அந்த அணி 165 ரன்கள் மட்டுமே அடித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

click me!