பார்டர் கவாஸ்கர் டிராபி - ஒரேயொரு முறை ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா!

By Rsiva kumarFirst Published Feb 3, 2023, 2:20 PM IST
Highlights

கடந்த 5 முறை நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா ஒரேயொரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
 

இந்தியா வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் வருகை!

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் களமிறங்கினால், இதுவே அவரது முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 5 முறை பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 4 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முழு உடல் தகுதியுடன் பும்ரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பு?

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்று கைப்பற்றியது. இதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 2018 ஆம் ஆண்டு 2-1 என்றும், 2020 ஆம் ஆண்டு 2-1 என்றும் பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா கைப்பற்றியது.

மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கு 1000க்கு அதிகமான வீராங்கனைகள் முன்பதிவு: ஐபிஎல் ஏலம் எப்போது?

ஆனால், இந்த முறை கண்டிப்பாக இந்தியா பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அதன் பிறகு நடந்த எந்த தொடரையும் கைப்பற்றவில்லை. இந்த தொடரை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்று ஆஸ்திரேலியா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

என்னை பொறுத்தவரையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்!

click me!