முழு உடல் தகுதியுடன் பும்ரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பு?

By Rsiva kumarFirst Published Feb 3, 2023, 11:30 AM IST
Highlights

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரையும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் இழந்த நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கு 1000க்கு அதிகமான வீராங்கனைகள் முன்பதிவு: ஐபிஎல் ஏலம் எப்போது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பும்ரா பங்கேற்கவில்லை. இவ்வளவு ஏன், இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை. 

என்னை பொறுத்தவரையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்!

முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

உம்ரான் மாலிக் வேகத்தில் பறந்த பெயில்ஸ்: கடைசி டி20ல் இந்தியா வெற்றி, தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது!

click me!