இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் வருகை!

By Rsiva kumarFirst Published Feb 3, 2023, 1:50 PM IST
Highlights

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பெற கட்டாயத்தில் உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளது.

முழு உடல் தகுதியுடன் பும்ரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பு?

Latest Videos

இந்த நிலையில், இந்த தொடர் குறித்து முக்கியமான தகவல் ஒன்று தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இந்தப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி நேரில் காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சேர்த்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஷூம் போட்டியை நேரில் காண வர இருப்பதாக கூறப்படுகிறது.

மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கு 1000க்கு அதிகமான வீராங்கனைகள் முன்பதிவு: ஐபிஎல் ஏலம் எப்போது?

அகமதாபாத் மைதானத்திற்கு நரேந்திர மோடி என்று பெயர் சூட்டப்பட்டதற்கு பிறகு ஒரு முறை கூட பிரதமர் மோடி போட்டியை காண வரவில்லை என்று கூறப்படுகிறது. முதல் முறையாக இந்தப் போட்டியை காண்பதற்கு பிரதமர் மோடி வர இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரு அணிகளும் மோதும், கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னை பொறுத்தவரையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்!

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், ஒரு போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது. 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு ஆஸ்திரேலியா இந்தியாவில் ஒரு தொடரைக் கூட கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உம்ரான் மாலிக் வேகத்தில் பறந்த பெயில்ஸ்: கடைசி டி20ல் இந்தியா வெற்றி, தொடரையும் 2-1 என்று கைப்பற்றியது!

click me!