டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியை கடுமையாக விமர்சித்துள்ளார் லசித் மலிங்கா.
அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளையெல்லாம் வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது இலங்கை அணி. ஆசிய சாம்பியனான இலங்கை அணி மீது டி20 உலக கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் பெரிய அணியான இலங்கை, டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாமல் தகுதிப்போட்டியில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. ஆனால் நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்வதால் எளிதாக இந்த 3 அணிகளையும் இலங்கை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
undefined
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: விசா பிரச்னையால் ஆஸி.,க்கு பறக்கமுடியாத உம்ரான் மாலிக்..! இன்னொரு வீரரும் பாவம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி 20 ஓவரில் 163 ரன்களை குவித்தது. இலங்கை அணியின் 3 ஃபாஸ்ட் பவுலர்களான துஷ்மந்தா சமீரா (39), பிரமோத் மதுஷன் (37) மற்றும் சாமிகா கருணரத்னே (36) ஆகிய மூவருமே அதிக ரன்களை வாரி வழங்கினர். டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்கினர்.
164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆசிய சாம்பியன் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். கேப்டன் தசுன் ஷனாகா அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார். நிசாங்கா(9), குசால் மெண்டிஸ்(6), தனஞ்செயா டி சில்வா(12), குணதிலகா(0), பானுகா ராஜபக்சா(20) என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இலங்கை.
இதையும் படிங்க - பாகிஸ்தான் அணியின் லெவலுக்கு இந்தியாவால் ஈடுகொடுக்க முடியாது..! டி20 உலக கோப்பைக்கு முன் கடும் எச்சரிக்கை
நமீபியாவிடம் இலங்கை தோற்றது அந்த அணிக்கும், அந்த அணியின் முன்னாள் வீரர்களுக்கும் பெரும் அதிருப்தியளித்தது. இலங்கை அணியின் தோல்வி குறித்து டுவீட் செய்த மலிங்கா, டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்கிவிட்டார்கள். ஃபாஸ்ட் பவுலர்கள் மோசம். யாராவது ஒரு பேட்ஸ்மேன் 60-70 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று மலிங்கா விமர்சித்தார்.