டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்..! அறிமுக போட்டியிலயே வரலாற்று சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

By karthikeyan VFirst Published Feb 7, 2021, 7:42 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அறிமுகமான வெஸ்ட் இண்டீஸ் வீரர் கைல் மேயர்ஸ், அறிமுக டெஸ்ட்டின் 4வது இன்னிங்ஸில் இரட்டை சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கடைசி இன்னிங்ஸில் 395 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அந்த கடினமான இலக்கை வெற்றிகரமாக விரட்டி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம், வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கைல் மேயர்ஸ். 

கடைசி இன்னிங்ஸில் கடின இலக்கை விரட்டும்போது, அந்த அழுத்தத்தை எல்லாம் மண்டைக்கு ஏற்றிக்கொள்ளாமல் மிகச்சிறப்பாக ஆடி இரட்டை சதமடித்து(210) கடைசி வரை களத்தில் நின்று வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

இந்த இரட்டை சதத்தின் மூலம், அறிமுக டெஸ்ட் போட்டியின் 4வது இன்னிங்ஸில் சதமடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் கைல் மேயர்ஸ். 

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், கடைசி இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஆறாவது வீரர் கைல் மேயர்ஸ். டிப் ஃபோஸ்டர், லாரன்ஸ் ரோவ், பிரண்டன் குருப்பு, மேத்யூ சின்க்லைர், ஜாக் ருடால்ஃப் ஆகிய ஐந்து வீரர்கள் ஏற்கனவே இந்த சாதனையை படைத்துள்ளனர். அவர்களுக்கு பிறகு கடைசி இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த ஆறாவது வீரர் மேயர்ஸ் ஆவார். ஆனால் அதை அறிமுக போட்டியிலேயே செய்தது தான் மேயர்ஸின் ஸ்பெஷல்.
 

click me!