இந்தியாவின் தலைசிறந்த மேட்ச் வின்னர்.. தலைவணங்குகிறேன் தலைவா..! முன்னாள் லெஜண்டுக்கு மரியாதை தெரிவித்த கம்பீர்

By karthikeyan VFirst Published Feb 7, 2021, 7:36 PM IST
Highlights

இந்தியாவின் லெஜண்ட் ஸ்பின்னரும் முன்னாள் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டை வீழ்த்திய தினத்தின் 22ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கவுதம் கம்பீர்.
 

இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை(619) வீழ்த்திய 3வது பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அனில் கும்ப்ளே, 1999ல் டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.

அந்த போட்டியில் கடைசி இன்னிங்ஸில் 420 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. அந்த கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சயீத் அன்வரும் ஷாஹித் அஃப்ரிடியும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் அடித்தது. முதல் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்த அனில் கும்ப்ளே, அதன்பின்னர் அனைத்து விக்கெட்டுகளையும் அவர் தான் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டாக வாசிம் அக்ரமை வீழ்த்திய கும்ப்ளே, அந்த இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ம் 74 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட் வீழ்த்தினார் கும்ப்ளே.

அந்த 10 விக்கெட்டுகளையும் கும்ப்ளே வீழ்த்திய வரலாற்று சிறப்புமிக்க தினம் இன்றுதான்(பிப்ரவரி 7). அதையொட்டி, கும்ப்ளேவை கௌரவப்படுத்தி அவரது சாதனையை நினைவுகூரும் விதமாக அந்த பிசிசிஐ வீடியோவை பகிர்ந்திருந்தது.

அதைக்கண்ட, கும்ப்ளேவின் மீது எப்போதுமே உயர் மதிப்பும் மரியாதையும் கொண்ட கம்பீர், இந்தியாவின் தலைசிறந்த மேட்ச் வின்னர் கும்ப்ளே.. உங்களுக்கு தலைவணங்குகிறேன் லெஜண்ட் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!