#BANvsWI கைல் மேயர்ஸ் இரட்டை சதம்.. முதல் டெஸ்ட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Feb 7, 2021, 4:44 PM IST
Highlights

முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி மெஹிடி ஹசனின் சதம்(103) மற்றும் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம்(59), ஷகிப் அல் ஹசன்(68) ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 430 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிராத்வெயிட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் அதிகபட்சமாக 76 ரன்களும் பிளாக்வுட் 68 ரன்களும் அடித்தனர். ஜோஷுவா டி சில்வா 42 ரன்களும், கைல் மேயர்ஸ் 40 ரன்களும் அடித்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 259  ரன்கள் மட்டுமே அடித்தது. 

171 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ரன்கள் வங்கதேச அணி கேப்டன் மோமினுல் ஹக்கின் சதம்(115) மற்றும் லிட்டன் தாஸின் அரைசதம்(69) ஆகியவற்றால் 223 ரன்களை அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் அடித்த நிலையில் 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து மொத்தமாக 394 ரன்கள் முன்னிலை பெற்றது வங்கதேச அணி. கடைசி இன்னிங்ஸில் 395 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, யாருமே எதிர்பார்த்திராத விதமாக, கைல் மேயர்ஸின் அபார இரட்டை சதத்தால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

கைல் மேயர்ஸ் மற்றும் பானர் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பானர் 86 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஒருமுனையில் நிலைத்து நின்று இரட்டை சதம் அடித்த கைல் மேயர்ஸ் கடைசி வரை களத்தில் நின்று, வெற்றி இலக்கை எட்டி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். கைல் மேயர்ஸ் 210 ரன்களை விளாசினார். 3 விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.
 

click me!