#INDvsENG அவரை ஏன் ஆடவைக்கல..? இந்திய அணியின் முடிவால் செம டென்சனான ஹர்பஜன் சிங்

By karthikeyan VFirst Published Feb 6, 2021, 10:29 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை இந்திய அணியில் எடுக்காதது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், சிப்ளி ஆகியோர் அபாரமாக ஆடினர். தனது 100வது டெஸ்ட்டில் இரட்டை சதமடித்தார் ஜோ ரூட். ஜோ ரூட் 218 ரன்களை குவித்தார். சிப்ளி 87 ரன்களும் ஸ்டோக்ஸ் 82 ரன்களும் அடித்தனர்.

இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த இந்திய பவுலர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஸ்பின்னர்கள் தான் அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க வேண்டும். அந்தவகையில், இந்திய அணி சீனியர் ஸ்பின்னரும் மண்ணின் மைந்தனுமான அஷ்வினை அதிகமாக சார்ந்திருந்தது. ஆனால் ஸ்பின்னை நன்றாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் என்பதால் ரூட், ஸ்டோக்ஸ் ஆகியோர் ஸ்பின் பவுலிங்கை நேர்த்தியாக ஆடியதால் அனுபவ அஷ்வினாலோ, இளம் வாஷிங்டன் சுந்தராலோ ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

2 நாள் முடிந்த நிலையில் இந்திய அணி 2 நாட்களில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியது. 2ம் நாள் ஆட்ட முடிவில் 555 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 2 விக்கெட்டுகள் எஞ்சியிருக்கும் நிலையில், 3ம் நாளான நாளைய ஆட்டத்தையும் இங்கிலாந்து அணியே தொடரவுள்ளது.

இந்திய பவுலர்கள் விக்கெட் வீழ்த்த திணறிய நிலையில், ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்பை எடுக்காமல் அஷ்வின் மற்றும் சுந்தர் ஆகிய 2 ஆஃப் ஸ்பின்னர்களை ஆடவைத்த இந்திய அணியின் முடிவை விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் டாக்கில் பேசிய ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவை அணியில் எடுக்காதது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அக்ஸர் படேல் காயத்தால் ஆடவில்லை. அவரது இடத்தில் அவரைப்போன்ற இடது கை ஸ்பின்னரான ஷபாஸ் நதீமை எடுத்ததில் பிரச்னையில்லை. ஆனால் 2 ஆஃப் ஸ்பின்னர்களை எடுத்ததில் எந்த அர்த்தமும் இல்லை.

குல்தீப் யாதவை எடுத்திருந்தால் வெரைட்டி கிடைத்திருக்கும்.  குல்தீப் ஆடிய கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். அவரை எடுக்காதது எனக்கு வியப்பாக இருந்தது என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!