சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பளிக்கப்படுமா?

By Rsiva kumarFirst Published Jan 11, 2023, 6:30 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் யுஸ்வேந்திர சகாலுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்று இழந்த நிலையில், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. 

SA20: டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை!

இதில் சுப்மன் கில் 70, ரோகித் சர்மா 83, விராட் கோலி 113 என்று ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து, 374 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இலங்கை அணியில் பதும் நிசாங்கா 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தசுன் ஷனாகா அதிரடியாக ஆடி 106 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மும்பை 687 எடுத்து டிக்ளேர் - சஞ்சய் மஞ்ரேக்கர் சாதனையை முறியடித்த பிரித்வி ஷா 379 ரன்கள்!

பந்து வீச்சு தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், சகால், ஹர்திக் பாண்டியா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. ஆனால், இவரது ஓவரில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா கொடுத்த கேட்சை ரோகித் சர்மா 2 முறையும், விராட் கோலி ஒரு முறையும் கோட்டை விட்டனர். இதன் காரணமாக ஷனாகா 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

HBD Rahul Dravid: 12 வயது முதல் கிரிக்கெட் ஆடிய ராகுல் டிராவிட்டின் சாதனை துளிகள் இதோ!

இந்த நிலையில், ஒரு நாள் தொடரில் இடம் பெற்றுள்ள குல்தீப் யாதவ், நாளை நடக்கவுள்ள 2 ஆவது ஒரு நாள் போட்டியில் சகாலுக்குப் பதிலாக இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சொதப்பி வரும் சகால் ஓவரில் நேற்று இலங்கை வீரர்கள் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர். 10 ஓவர்கள் வீசிய சகால் ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றி 58 ரன்கள் கொடுத்தார். ஆகையால், அவருக்குப் பதிலாக இந்த முறை குல்தீப் யாதவ்விற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை கொல்கத்தா மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

முதல் ஒரு நாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி படைத்த சாதனைகள்!

click me!