கேஸ் பரத் எறிந்த பந்து, பேட்டிங் செய்து கொண்டிருந்த உஸ்மான் கவாஜா மீது பட்டதால் அருகில் இருந்த விராட் கோலி சட்டென்று பரத்தை திட்டினார். இந்த சம்பவம் ஸ்டெம்ப் கேமராவில் வசமாக சிக்கியது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 61 ரன்களை சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் 3 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா சாதனையை முறியடித்து நம்பர் 1 இடம் பிடித்த உஸ்மான் கவாஜா!
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
ஆஸ்திரேலிய அணி:
டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
முதல் முறையாக இந்தியாவுக்கு டூர் வந்த கேமரூன் க்ரீன் - பவுண்டரியுடன் முதல் சதமடித்து சாதனை!
அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் பங்கிற்கு 38 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் களமிறங்க, அவர் 17 பந்துகளில் ஷமி பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் களமிறங்கினார். கவாஜா மற்றும் க்ரீன் இருவரும் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இதையடுத்து முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
208 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்த அஸ்வின் - விழவே வேணானுன்ன இருந்த விக்கெட், ஒன்னுக்கு ஒன்னு ப்ரீ!
முதல் நாள் போட்டியின் 71ஆவது ஓவரில், விக்கெட் கீப்பர் கேஸ் பரத் மற்றும் பேட்டிங் திசையில் நின்றிருந்த உஸ்மான் கவாஜா இடையில் நடந்த சம்பவம் வேடிக்கையாக இருந்தது. ஷமி வீசிய ஓவரில் கவாஜா தலைக்கு பந்து வந்ததால் அவர் குணிந்து கொண்டார். இதையத்து கீப்பர் கைக்கு பந்து சென்றது. விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் சும்மா நிற்காமல், பந்தை கவாஜாவை பார்த்து எறிந்துள்ளார். அவர் வீசிய பந்து கவாஜாவின் காலில் பட்டது. இதையடுத்து கவாஜா பின்னாடி திரும்பி பார்த்தார். கேஎஸ் செயலை பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி அவரை பார்த்து சும்மா அமைதியா இருடா என்ற பாணியில் திட்டியுள்ளார்.
அதன் பிறகு கேஎஸ் பரத், கவாஜாவிடம் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவத்தை எல்லாம் கேப்டன் ரோகித் சர்மா சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, வரையில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். கேமரூன் க்ரீன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!