பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், ரோகித் சர்மா எடுத்திருந்த 120 ரன்கள் சாதனையை ஆஸி, வீரர் உஸ்மான் கவாஜா அசால்ட்டாக முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. இதில், உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
முதல் முறையாக இந்தியாவுக்கு டூர் வந்த கேமரூன் க்ரீன் - பவுண்டரியுடன் முதல் சதமடித்து சாதனை!
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.
ஆஸ்திரேலிய அணி:
டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.
இதையடுத்து இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், இருவரும் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து களமிறங்கினர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இன்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே க்ரீன் ஒரு ரன் எடுத்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து இருவரும் ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். தேவைப்படு போது பவுண்டரியும் விளாசினர்.
ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவிப்பு: கவாஜா 150*, க்ரீன் 95* - இந்த கூட்டணியை பிரிக்க யாராலயும் முடியல!
ஒரு கட்டத்தில் உஸ்மான் கவாஜா 121 ரன்கள் எடுத்திருந்த போது 2023 ஆம் ஆண்டில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து ரோகித் சர்மா சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 120 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது கவாஜா அவரது அதிகபட்ச ரன் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடம் பிடித்து விளையாடி வருகிறார். தற்போது வரையில் கவாஜா, 162 ரன்கள் எடுத்துள்ளார்.
பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!
இதே போன்று முதல் முறையாக இந்தியா வந்த கேமரூன் க்ரீன், இந்தியாவில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். 23 வயதே ஆன கேமரூன் க்ரீன் தனது 20ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக மைக்கேல் கிளார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதல் சதத்தை பூர்த்தி செய்த ஆஸி, வீரர்கள்:
லெஸ் பாவெல் 101 - சென்னை - 1959/60
ஃபால் ஷீகென் 114 - கான்பூர் - 1969/70
டீன் ஜோன்ஸ் 210 - சென்னை - 1986/87
மைக்கேல் கிளார்க் 151 - பெங்களூரு - 2004/05
கிளென் மேக்ஸ்வெல் 104 - ராஞ்சி - 2016/17
கேமரூன் க்ரீன் 114 - அகமதாபாத் - 2022/23