#SLvsIND இந்திய ஆல்ரவுண்டருக்கு கொரோனா பாசிட்டிவ்..! இன்று நடக்கவிருந்த 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு

Published : Jul 27, 2021, 04:10 PM ISTUpdated : Jul 27, 2021, 04:20 PM IST
#SLvsIND இந்திய ஆல்ரவுண்டருக்கு கொரோனா பாசிட்டிவ்..! இன்று நடக்கவிருந்த 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, அதைத்தொடர்ந்து நடந்துவரும் டி20 தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

2வது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பில் நடக்கவிருந்த நிலையில், இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதன்விளைவாக, இன்று இரவு நடக்கவிருந்த 2வது டி20 போட்டி, நாளைக்கு(ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. க்ருணல் பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!