அந்த பையன் வேற லெவல் பவுலர்..! எல்லா பேட்ஸ்மேனையும் மிரட்டுறாப்ள.. இளம் வீரருக்கு லக்‌ஷ்மண் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 26, 2021, 10:13 PM IST
Highlights

தமிழத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை வெகுவாக புகழ்ந்துள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண்.
 

தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, ஐபிஎல் 13வது சீசனில்(2019 ஐபிஎல்) கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றார். ஆனால் காயம் காரணமாக அவர் அந்த தொடரில் ஆடமுடியாமல் போனது.

காயத்திலிருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் யோ யோ ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து 3வது முறையாக இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்று இலங்கை சென்றுள்ள வருண் சக்கரவர்த்திக்கு, ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், டி20 போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. 

கொழும்பில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி, 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 164 ரன்களை குவித்த இந்திய அணி, இலங்கையை 126 ரன்களுக்கு சுருட்டி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், அறிமுக போட்டியிலேயே நன்றாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி, முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மணை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

வருண் சக்கரவர்த்தி குறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், வருண் சக்கரவர்த்திக்கு ஆட வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் ஏற்கனவே 2 முறை வாய்ப்பு கிடைத்தும் அவரால் அணியில் இடம்பெறமுடியாமல் போனது. அவருடைய மாயாஜால ஸ்பின் குறித்து பெரிய பேச்சு இருக்கிறது. வருண் சக்கரவர்த்தியை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களிடம் அவரைப்பற்றி கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு விதமாக தொடர்ச்சியாக வீசுகிறார் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று வருண் சக்கரவர்த்தி குறித்து லக்‌ஷ்மண் பேசியுள்ளார்.
 

click me!