தம்பி பாண்டியாவுக்கு டீம்லயே இடம் இல்ல.. அண்ணன் பாண்டியா கேப்டனே ஆயிட்டாரு

By karthikeyan VFirst Published Sep 23, 2019, 12:56 PM IST
Highlights

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 24ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. 
 

உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவில், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஹைதராபாத், ஆந்திரா, குஜராத், சவுராஷ்டிரா, பெங்கால், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், பரோடா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், மேகாலயா, விதர்பா ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இந்த தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் பஞ்சாப் அணியின் கேப்டனாக மந்தீப் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு அணியை தினேஷ் கார்த்திக் வழிநடத்தி செல்லவுள்ளார். கேரள அணியின் கேப்டனாக கர்நாடகாவை சேர்ந்த மூத்த வீரரான ராபின் உத்தப்பாவும் துணை கேப்டனாக சஞ்சு சாம்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், விஜய் ஹசாரே தொடருக்கான பரோடா அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. பரோடா அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் க்ருணல் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். க்ருணல் பாண்டியா உள்நாட்டு போட்டிகளில் நன்றாக ஆடியதால், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுக்கப்பட்டு, அந்த அணியின் நிரந்தர வீரராக ஜொலித்துவருகிறார். கடந்த ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமான க்ருணல் பாண்டியா, டி20 அணியின் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்துவருகிறார். 

க்ருணல் பாண்டியா டி20 உலக கோப்பையில் உறுதியாகிவிட்டது. டி20 அணியில் அவருக்கான இடம் உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. அவர் இந்திய அணிக்காக டி20 போட்டியில் மட்டுமே ஆடிவருகிறார் என்பதால், அவர் உள்நாட்டு போட்டிகளில் ஆடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. இந்நிலையில், பரோடா அணியின் கேப்டனாக க்ருணல் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா பரோடா அணியில் இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்டியா சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடுவதால், அவரது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு அவர் உள்நாட்டு போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 

பரோடா அணியில் சீனியர் வீரரான யூசுஃப் பதான் இடம்பெற்றுள்ளார். அணியின் துணை கேப்டனாக கேதர் தேவ்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பரோடா அணி:

க்ருணல் பாண்டியா(கேப்டன்), கேதர் தேவ்தர்(துணை கேப்டன்), ரிஷி அரோத், தீபக் ஹூடா, லுமன் மேரிவாலா, மிதேஷ் படேல், பாபாஷஃபி, பதான், யூசுஃப் பதான், நினாத் ரத்வா, விஷ்ணு சோலங்கி, சோயேப் சோபாரியா, ஸ்வப்னில் சிங், ஆதித்ய வாங்மோட். 

click me!