IPL 2023: குறைவான தொகையில் நிறைவான தேர்வு.. KKR அணியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழக வீரர்கள்! வலுவான ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Dec 24, 2022, 9:06 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசனுக்கான ஏலம் கொச்சியில் டிசம்பர் 23ம் தேதி நடந்தது. ரூ.7.05 கோடி என்ற மிகக்குறைவான தொகையுடன் ஏலத்திற்கு வந்த அணி கேகேஆர் தான். 

ஷ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரசல், நிதிஷ் ராணா, சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி என கோர் வீரர்களை தக்கவைத்ததால் கேகேஆர் அணி ஏலத்தில் அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இருந்த குறைவான தொகையில், தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் மிகக்கவனமாகவும் தெளிவாகவும் பட்ஜெட்டில் வாங்கியது கேகேஆர் அணி.

Tap to resize

Latest Videos

IPL 2023: பழைய பன்னீர்செல்வமாக கம்பேக் கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ்! எதிரணிகளை அலறவிடும் மிரட்டலான ஆடும் லெவன்

சிஎஸ்கே அணியால் கழட்டிவிடப்பட்ட, விஜய் ஹசாரே தொடரில் சத மழை பொழிந்த தமிழக விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான நாராயண் ஜெகதீசனை ரூ.90 லட்சத்திற்கு வாங்கியது. ஏற்கனவே தங்கள் அணியில் அங்கம் வகித்த வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ.1.5 கோடிக்கு வாங்கியது. இதுதான் கேகேஆர் அணி இந்த ஏலத்தில் கொடுத்த அதிகபட்ச விலை. ஆனால் இது ஷகிப் அல் ஹசனின் அடிப்படை விலைதான். ஜெகதீசன் மற்றும் வைபவ் அரோரா என்ற பவுலர் ஆகிய இருவரை மட்டுமே ஏலத்தில் மற்ற அணிகளுடன் போட்டி போட்டு கேகேஆர் அணி எடுத்தது. அதுவும் ஜெகதீசனுக்கு ரூ.90 லட்சம்; அரோராவிற்கு ரூ.60 லட்சம். 

நமீபியா அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் டேவிட் வீஸ்-ஐ ரூ.1 கோடிக்கும், வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் மற்றும் மந்தீப் சிங் ஆகிய இருவரையும் ரூ.50 லட்சத்துக்கும் வாங்கியது கேகேஆர் அணி. கையில் இருந்த குறைவான தொகைக்கு அணிக்கு தேவையான நிறைவான செலக்‌ஷனை செய்தது கேகேஆர் அணி.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஜெகதீசன் ஆடுவார்கள். 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 4ம் வரிசையில் நிதிஷ் ராணா, 5ம் வரிசையில் ஷகிப் அல் ஹசன் ஆகியோரும் ஆடுவார்கள். பின்வரிசையில் ஆல்ரவுண்டர்கள் ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாகூர் ஆகிய மூவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன்..! யார் யாருக்கு அணியில் இடம்..?

ஃபெர்குசன், உமேஷ் யாதவ் ஆகியோருடன் ஷர்துல் தாகூர் மற்றும் ஆண்ட்ரே ரசலும் பந்துவீசுவர். சுனில் நரைனுடன் வருண் சக்கரவர்த்தி ஸ்பின்னராக ஆடுவார். ஷகிப் அல் ஹசனும் ஸ்பின் பவுலிங் வீசுவார் என்பதால் இந்த அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சமபலம் வாய்ந்த அணியாக திகழும். 

கேகேஆர் அணியில் நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், வருன் சக்கரவர்த்தி என தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்கள் ஆடுகின்றனர்.  

கேகேஆர் அணியின் வலுவான ஆடும் லெவன்:

வெங்கடேஷ் ஐயர், நாராயண் ஜெகதீசன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ஷகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், உமேஷ் யாதவ், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி. 
 

click me!