கோலி எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பாண்டிங்கை மட்டும் நெருங்க முடியல!!

By karthikeyan VFirst Published Mar 3, 2019, 3:57 PM IST
Highlights

அசாருதீன், கங்குலி, தோனி ஆகியோரை தொடர்ந்து கோலியும் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒரு வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

உலக கோப்பையை வெல்லும் பிரதான அணிகளில் ஒன்றாக கோலி தலைமையிலான இந்திய அணியும் ஒரு அணியாக பார்க்கப்படுகிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

அசாருதீன், கங்குலி, தோனி ஆகியோரை தொடர்ந்து கோலியும் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். கோலியின் தலைமையில் இந்திய அணி நேற்றைய போட்டியில் பெற்றது, 48வது ஒருநாள் வெற்றி. இதன்மூலம் கேப்டனாக முதல் 64 போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் சர்வதேச அளவில் மூன்றாவது கேப்டன் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். 

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். 51 வெற்றிகளுடன் பாண்டிங் முதலிடத்திலும் வெஸ்ட் இண்டீஸுக்கு இரண்டு உலக கோப்பையை வென்று கொடுத்த கிளைவ் லாயிட் 50 வெற்றிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியின் நீண்டகால வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். இரண்டு உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணிக்கு வென்று கொடுத்த பாண்டிங், தான் கேப்டனாக இருந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை மற்ற அணிகள் நெருங்கக்கூட முடியாத சக்தியாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கேப்டன்சி வெற்றியில் எத்தனை பேரை பின்னுக்கு தள்ளினாலும் பாண்டிங்கை முந்துவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. 
 

click me!