உலக கோப்பை இறுதி போட்டியில் இந்த 2 அணிகள் தான் மோதும்!! கவாஸ்கர் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 3, 2019, 2:58 PM IST
Highlights

கேன் வில்லியம்சனின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாகவே ஆடிவருகிறது. உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெகுண்டெழுந்துள்ளது. அதிரடி வீரர் கெய்ல் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஸ்மித் மற்றும் வார்னரின் வருகையை எதிர்நோக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. அவர்கள் இருவரும் அணிக்கு திரும்பிவிட்டால் ஆஸ்திரேலிய அணியும் வலுவாகத்தான் திகழும். 
 

உலக கோப்பை வரும் மே மாத இறுதியில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. தற்போதைய சூழலில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. எனவே இரு அணிகளில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று பிரயன் லாரா உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலர் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கான கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. முதல் 3 வீரர்களான ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. குல்தீப் யாதவ் சுழலில் மிரட்டுகிறார். இவ்வாறு நல்ல கலவையிலான வலுவான அணியாக இந்திய அணி திகழ்கிறது. இங்கிலாந்து அணியும் வலுவாக உள்ளது. 

கேன் வில்லியம்சனின் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சிறப்பாகவே ஆடிவருகிறது. உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெகுண்டெழுந்துள்ளது. அதிரடி வீரர் கெய்ல் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். ஸ்மித் மற்றும் வார்னரின் வருகையை எதிர்நோக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. அவர்கள் இருவரும் அணிக்கு திரும்பிவிட்டால் ஆஸ்திரேலிய அணியும் வலுவாகத்தான் திகழும். 

இந்நிலையில், உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும்தான் மோதும் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் ஆருடம் தெரிவித்துள்ளார். 
 

click me!