India vs Pakistan Super Fours: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும்?

By Rsiva kumar  |  First Published Sep 10, 2023, 10:48 AM IST

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 4 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று கொழும்புவில் நடக்க உள்ள சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆனால், இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Sri Lanka vs Bangladesh Super Fours: வங்கதேசத்தை வீழ்த்தி 13ஆவது வெற்றி பெற்று சாதனை படைத்த இலங்கை!

Tap to resize

Latest Videos

எனினும், ரிசர்வ் டே என்று சொல்லப்படும் அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை குறுக்கீடு இல்லாத நிலையில், போட்டியானது முழுமையாக நடந்து முடிந்தது. அதே போன்று தான் இன்றைய போட்டியிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2024: கௌதம் காம்பீர் விலக வாய்ப்பில்லை – ஆலோசகராக தொடர்வார் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் நிர்வாகம்!

இந்திய அணியில் முதல் 2 போட்டிகளில் விளையாடாத கேஎல் ராகுல் இன்று நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றால் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இஷான் கிஷான் இடம் பெற்றால் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், இஷான் கிஷான் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 82 பந்துகளில் 81 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். ஷமி இந்தப் போட்டியில் இடம் பெற மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா பிளேயிங் 11:

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

India vs Pakistan Super 4: நாய்க்குடியுடன் கால்பந்து விளையாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!

click me!