நான் தான் ஓபனர்.. விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த கேஎல் ராகுல்

By karthikeyan VFirst Published Sep 21, 2022, 3:52 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் கோலி-ராகுல் இருவரில் யார் இறங்கலாம் என்பது பெரும் விவாதமாக நடந்துவந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, நான் தான் ஓபனர் என நிரூபித்துள்ளார் ராகுல்.
 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஜோடி ரோஹித் - ராகுல் தான். அவர்கள் இருவரும் தான் தொடக்க வீரர்களாக ஆடிவருகின்றனர். இடையில் ராகுல் காயத்தால் சில மாதங்கள் ஆடவில்லை. அதன்பின்னர் காயத்திலிருந்து மீண்டுவந்த அவர், அதன்பின்னர் சரியாக ஆடவில்லை.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஓபனிங்கில் இறங்கி அபாரமாக பேட்டிங் ஆடி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார் விராட் கோலி. மேலும் 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்து அசத்தினார்.

இதையும் படிங்க - 18 பந்தில் 49 ரன்கள்.. இந்திய அணியின் பெரிய பிரச்னையே அவர் தான்..! சீனியர் வீரரை பற்றி கவலைப்படும் கவாஸ்கர்

ஐபிஎல்லிலும் ஓபனிங்கில் இறங்கி சதங்களை விளாசியிருக்கிறார் விராட் கோலி. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக ஓபனிங் ஆட விரும்புவதாக விருப்பமும் தெரிவித்திருந்தார். அவர் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்த சதத்திற்கு பின், டி20 உலக கோப்பையில் கோலியே தொடக்க வீரராக இறங்கலாம் என்ற கருத்து எழுந்தது.

ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கப்போவது கோலியா ராகுலா என்ற விவாதம் ஹாட் டாபிக்காக இருந்தது. சில முன்னாள் வீரர்கள் கோலிஎன்றும், சிலர் ராகுலே இறங்கலாம் என்றும் கருத்து கூறினர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் தொடக்க வீரர் ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 35 பந்தில் 55 ரன்களை விளாசி அசத்தினார். அதேவேளையில் கோலி வெறும் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

தொடக்க வீரராக தனது இடத்தை தக்கவைத்தாக வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ராகுல், அந்த வேலையை செவ்வனே செய்தார். அபாரமாக பேட்டிங் ஆடி அசத்டினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடிய பேட்டிங்கின் மூலம் இந்திய அணியின் தொடக்கவீரர் நான் தான் என நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க - ஆஸி.,க்கு எதிராக 208 ரன்கள் அடித்தும் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்..! ரவி சாஸ்திரி விளாசல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகள் மற்றும் தென்னாப்பிரிக்க தொடர் ஆகியவற்றிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, தன்னுடைய ஓபனிங் பேட்டிங் ஆர்டர் குறித்த விவாதமே மறுபடியும் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது கேஎல் ராகுலின் மனதில் கண்டிப்பாக ஓடிக்கொண்டிருக்கும்.
 

click me!