சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மாபெரும் சாதனை..!

Published : Sep 21, 2022, 02:03 PM IST
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மாபெரும் சாதனை..!

சுருக்கம்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மார்டின் கப்டிலை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்துள்ளார் ரோஹித் சர்மா.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 208 ரன்களை அடித்தது. 209 ரன்கள் என்ற கடின இலக்கை அடித்து ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க - 18 பந்தில் 49 ரன்கள்.. இந்திய அணியின் பெரிய பிரச்னையே அவர் தான்..! சீனியர் வீரரை பற்றி கவலைப்படும் கவாஸ்கர்

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் இந்த 11 ரன்களை அடித்தார். இந்த போட்டியில் அடித்த சிக்ஸர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது 172வது சிக்ஸர் ஆகும்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை மார்டின் கப்டிலுடன் பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில் 172 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த நிலையில், அவரை சமன் செய்துள்ளார் ரோஹித் சர்மா. 

இதையும் படிங்க - ஆஸி.,க்கு எதிராக 208 ரன்கள் அடித்தும் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்..! ரவி சாஸ்திரி விளாசல்

சிக்ஸர்களை அசால்ட்டாக அடிப்பதால் ஹிட்மேன் என பெயர் பெற்ற ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 486 சிக்ஸர்களை விளாசி, கிறிஸ் கெய்லுக்கு (553) அடுத்து 2ம் இடத்தில் உள்ளார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!