காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய கே எல் ராகுல்: வைரலாகும் புகைப்படம்!

By Rsiva kumarFirst Published Jan 2, 2023, 10:01 AM IST
Highlights

தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. வங்கதேச தொடரில் கே எல் ராகுல் இடம் பெற்றிருந்தார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் 73 ரன்கள் எடுத்தார். 2ஆவது ஒரு நாள் போட்டியில் 14 ரன்களும், 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 8 ரன்களும் எடுத்தார். ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அதோடு, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் கே எல் ராகுல் தான் கேப்டனாக இருந்தார். ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மாலத்தீவில் மனைவி, மகளுடன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

இந்தியா வரும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நாள் போட்டியில் விராட் கோலி, கே எல் ராகுல், ரோகித் சர்மா ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை தொடருக்கு முன்னதாக குடும்பத்தோடு சுற்றுலா சென்ற ரோகித் சர்மா!

ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 10 ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த நிலையில், தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் துபாயில் வைத்து புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IND vs SL:ரோஹித், கோலி இல்லாத இந்திய அணி.. முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

இருவருக்கும் இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் 12 பி, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளதுடன், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவரது மகளும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கே எல் ராகுல் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இந்த காதல் திருமணத்தில் ஒன்று இருக்கிறது. இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ இருவருக்கும் இடையில் திருமணம் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை இந்த ஆண்டே கோலி தகர்ப்பார்..! முன்னாள் பேட்டிங் கோச் நம்பிக்கை

 

2023 🫶🏼 pic.twitter.com/ZHaHszcvqb

— K L Rahul (@klrahul)
click me!