மாலத்தீவில் மனைவி, மகளுடன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

By Rsiva kumar  |  First Published Jan 2, 2023, 9:25 AM IST

இலங்கை தொடருக்கு முன்னதாக உள்ள ஓய்வு நேரத்தை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மாலத்தீவில் செலவிட்டு வருகிறார்.


வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டியது தான். ஆனால், அசால்ட்டுத்தனத்தால் இந்திய அணி வெற்றியை கோட்டைவிட்டது. 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் செய்யும் போது கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பீல்டிங் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டார். கடைசி நேரத்தில் தான் பேட்டிங் செய்யவும் வந்தார். அந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் சேர்த்தார். ஆனாலும், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை தொடருக்கு முன்னதாக குடும்பத்தோடு சுற்றுலா சென்ற ரோகித் சர்மா!

Tap to resize

Latest Videos

undefined

இதைத் தொடர்ந்து 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகினார். வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்தும் விலகினார். அவருக்குப் பதிலாக கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். தற்போது இந்தியா வரும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

IND vs SL:ரோஹித், கோலி இல்லாத இந்திய அணி.. முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வரும் 10 ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக தற்போது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் மகளுடன் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிட்டு வருகிறார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரோகித் சர்மா அங்கு நன்றாகவே என்ஜாய் பண்ணுகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் சத சாதனையை இந்த ஆண்டே கோலி தகர்ப்பார்..! முன்னாள் பேட்டிங் கோச் நம்பிக்கை
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Sajdeh (@ritssajdeh)

 

click me!